இந்தியாவில் இளநிலை படிப்புகளில் சேர இனி நுழைவுத் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதுமட்டுமன்றி கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலன் கருதி 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கும் அரசு விடுமுறை அளித்துள்ளது.
இந்நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர இனி நுழைவுத் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு யோசித்து வருவதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டால் 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்து கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்படும்.