அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சென்ற 5-ஆம் தேதி மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கியது. இதனையடுத்து மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் முதல் கட்டமாக மொழிப் பாடம் தவிர முதன்மை பாடங்களில் 400 மதிப்பெண்ணுக்கு 330 வரை எடுத்த மாணவிகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு சென்ற 12-ம் தேதி வரை நடந்தது. அதன்பின் காலியாகவுள்ள பாடப் பிரிவுக்கான இடங்களுக்கு வரும் 22-ஆம் தேதி முதல் 2ம் கட்ட கலந்தாய்வு துவங்குகிறது. அந்த வகையில் வரும் 22-ஆம் தேதி கலந்தாய்வில் பி.காம்., (2-வது ஷிப்டு) படிப்புக்கு 320-329 மதிப்பெண் எடுத்த எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.சி.அருந்ததியர், எஸ்.டி. போன்ற பிரிவுகளுக்கும், பி.பி.ஏ., படிப்புக்கு 320-329 மதிப்பெண் எடுத்த எஸ்.சி.அருந்ததியர், பொருளியல், வரலாறு, புவியியல் பாடப்பிரிவுகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கு 250-329 மதிப்பெண் வரையிலும் அனைத்து பிரிவினரும் பங்கேற்கலாம்.
வரும் 23ஆம் தேதி கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல் தமிழ் மற்றும் ஆங்கிலவழி, கணினி அறிவியல், பி.சி.ஏ., தாவரவியல், மனையியல் ஆங்கில வழி பிரிவுகளுக்கு 260-329 மதிப்பெண் பெற்றவர்களுக்கு நடக்கிறது. மேற்கண்ட 2 தினங்களும் பிளஸ்2-ல் தொழிற்கல்வி பாடப்பிரிவில் படித்து 330-க்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்கள் பங்கேற்கலாம். அதன்பின் வரும் 24ஆம் தேதி தமிழ் இலக்கியம் பட்டப்படிப்புக்கு தமிழ் மொழிப் பாடத்தில் 87-88 மதிப்பெண் பெற்ற பி.சி. பிரிவு மாணவிகளுக்கும், 65-74 மதிப்பெண் பெற்ற எஸ்.சி.அருந்ததியர் பிரிவு மாணவிகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
ஆங்கில இலக்கிய பட்டப்படிப்புக்கு ஆங்கில மொழிப் பாடத்தில் முதல் ஷிப்டுக்கு 80-81 மதிப்பெண் பெற்ற பி.சி.மாணவிகள், 65-74.78 மதிப்பெண் பெற்ற எஸ்.சி.அருந்ததியர், எஸ்.டி. பிரிவு மாணவிகள் பங்கேற்கலாம். 2வது ஷிப்டுக்கு 65-74.44 மதிப்பெண் பெற்ற அனைத்துப் பிரிவு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். இந்த கலந்தாய்வு காலை 9:30 மணிக்கு துவங்கும். குறிப்பிட்ட மதிப்பெண் பெற்ற மாணவிகள் மட்டும் தங்கள் பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் எண் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், கல்விக் கட்டணம் ரூபாய்.1,400-ரூ.2,100 போன்றவற்றை கொண்டுவர வேண்டும். அவ்வாறு கலந்தாய்வில் தேர்வு செய்யப்படும் மாணவிகளின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்பே கல்விக் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்படும்.