Categories
தேசிய செய்திகள்

“இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட்தேர்வு” இனி வயது உச்சவரம்பு கிடையாது…. சூப்பர் அறிவிப்பு…..!!!!!

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட்தேர்வை எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. ஆகிய இடஒதுக்கீட்டு பிரிவினர் 30 வயது வரையும், பொதுப் பிரிவினர் 25 வயது வரையும் எழுதலாம் என கடந்த 2017 ஆம் வருடம் சி.பி.எஸ்.சி. உச்சவரம்பு நிர்ணயித்து இருந்த நிலையில், இந்த வயது உச்சவரம்பை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்துள்ளது.

அதாவது இளநிலை மருத்துவம் படிப்புகளுக்கான “நீட் தேர்வை” எழுதுவதற்கு வயது உச்ச வரம்பானது இருக்கக்கூடாது என தேசிய மருத்துவம் ஆணையம் கூட்டத்தில் முடிவெடுத்து இருப்பதாக அதனுடைய செயலாளரான டாக்டர் புல்கேஷ் குமார் கூறியுள்ளார். இது குறித்த விதிமுறைகளை திருத்தி அறிவிப்பாணை வெளியிடுவதற்கான நடைமுறை தொடங்கப்பட்டு இருப்பதாக தேசிய தேர்வு முகமைக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு வயது உச்சவரம்பு நீக்கப்பட்டு இருப்பதால் “நீட் தேர்வை” எந்த வயதினரும், எத்தனை தடவை வேண்டுமானாலும் எழுதலாம் எனவும் இதர படிப்புகளில் சேர்ந்த பின்பும் எழுதலாம் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டில் மருத்துவம் பயில விரும்புபவர்களுக்கும் இது உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |