Categories
மாநில செய்திகள்

இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு….. தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் மருத்துவம் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 490 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 18 லட்சத்திற்கு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி 2022-2023 ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு வருகின்ற செப்டம்பர் 22ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tnhealth.tn.gov.in, http://tnmedicalselection.org என்ற இணையதளங்களில் வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் பெரும்பாலும் ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |