இளநீரில் இவ்வளவு நன்மைகளா.? உடலுக்கு தீங்கு தராத எந்தவித ரசாயனங்களும் கலக்காத தூய்மையான பானம் தான் இளநீர்..!
இதை பூலோக கற்பக விருட்சம் என்று கூறுவார்கள். பொதுவாக இதை சாப்பிட்ட உடனேயே உடலுக்கு உடனடி ஆற்றலை தரும் பானமாக இருக்கும்.
இதில் அடங்கியுள்ள சத்துக்கள்:
- கலோரிகள்
- புரதம்
- கொழுப்பு
- பொட்டாசியம்
- நார்ச்சத்து
- கார்போஹைட்ரேட்
- கால்சியம்
- இரும்புச்சத்து
- தயாமின்
- நியாசின்
இப்படி ஏராளமான சத்துக்கள் உள்ளன. இளநீரை வெயில் காலத்தில் கட்டாயம் அருந்த வேண்டும் என்பதற்கான முக்கியமான காரணங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
வெயில் காலத்தில் தினமும் ஒரு இளநீர் அருந்தி வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்படும். உடல் சூடு தணியும், கண்கள் குளிர்ச்சி அடையும், உடலில் நீர் வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ளும். பொதுவாக வெயில் காலத்தில் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட் வியர்வை மூலமாக வெளியேற்றப்படுகின்றன.
அதை மீண்டும் உடலுக்கு அளிக்க இளநீர் சரியான வலி. பொதுவாக உடலில் நீர் வறட்சியால் சிறுநீர் எரிச்சல், நீர் குத்தல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். உடல் சூடு அதிகமாவதால் உடலில் நீர் வற்றிப் போய் சிறுநீர், மலம் கழிக்க சிரமம் ஏற்படும். கோடை காலங்களில் பல தொற்று நோய்கள் உடலில் உள்ளுறுப்புகளையும், சருமத்தை உட்பட பாதிக்கும்.
எனவே தினமும் ஒரு இளநீர் சாப்பிட்டால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம். பொதுவாக கோடை முடியும் வரை தினமும் சாப்பிட்டு வந்தால் நமது உடலில் இருக்கும் நீர்ச்சத்துக்களை தக்க வைப்பதுடன் உடல் உஷ்ணம் தொடர்பாக ஏற்படக்கூடிய சிறுநீர் பிரச்சனைகள் வருவதையும் தடுக்கலாம்.
முக்கியமாக இது வாதத்தை கட்டுப்படுத்துவதுடன், சிறுநீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது. அது மட்டுமல்ல அதிக வெப்பத்தால் உண்டாகும், அம்மை நோயும் வராமல் தினமும் பருகினால் நல்லது. வயிற்றில் வாயுவின் சீற்றம் அதிகமாகி வயிற்றில் புண்களை ஏற்படுத்தும்,அப்போது வயிற்றின் உட்புறச் சுவர்களை தாக்கி புண்களை ஏற்படுத்தும்.
மேலும் முறையற்ற உணவு பழக்கம் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது இதன் மூலம் ஏற்படக்கூடிய அஜீரண கோளாறு பிரச்சினைகளை தீர்க்கும் குணம் இளநீருக்கு உண்டு. அதேபோன்று இளநீரை குழந்தைகளுக்கு கொடுத்தால் எலும்புகளுக்கும், உறுப்புகளுக்கும் வலிமையை கொடுக்கும். உடலுறுப்பு சீராக இருக்கும்.
இதற்கு காரணம் இளநீரில் சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும். நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் மூளைக்கு புத்துணர்வும், நரம்புகளுக்கு வலுவும் கொடுத்து நினைவு ஆற்றலை அதிகப்படுத்தும். உடற்பயிற்சிக்கு பின்னர் இளநீர் குடிப்பது நல்லது.
உடற்பயிற்சி செய்பவர்கள் உடலில் இழந்த எலக்ரோலைட் சமன் செய்கிறது. இது உடல் சோர்வை போக்கும். மேலும் இது உடல் சோர்வை போக்கி சிறந்த ஆற்றலை கொடுக்கிறது. எனவே விளையாட்டு வீரர்களுக்கு இது சிறந்த பானமாகும். அதேபோன்று கோடைகாலங்களில் பெண்களுக்கும் சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் அதிகம் ஆகும்.
எனவே பெண்களும் தினமும் ஒரு இளநீர் சாப்பிடுவது நல்லது. முக்கியமாக கர்பிணி பெண்கள் இளநீர் குடித்தால் நீர் சத்து குறைபாடு பிரச்சனைகள் இருந்து விடுபடலாம். மேலும் கர்ப்ப காலத்தில் காலை நேரத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சலை குணப்படுத்த உதவுகிறது. மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் அடிவயிறு வலிக்கு இவை சிறந்த மருந்தாகும்.
ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கால்சியம் மற்றும் பொட்டாசியம் தான் அதிகமாக தேவைப்படும். அவர்களுக்கும் இளநீர் நல்ல மருந்து என்று சொல்லலாம். ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும். இதயம் சீராக செயல்படும் இதய வால்வுகளை பலப்படுத்தும். இவர்கள் தினமும் ஒரு இளநீரை சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் வராது. இது ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது.
அதேபோன்று மது பழக்கம் உள்ளவர்களின் கல்லீரல் அதிகம் பாதிப்படையும். அதனை சரி செய்யும் வல்லமை இளநீருக்கு உண்டு. மேலும் ரத்த சோகையை போக்கும். ஜீரணசக்தியை மேம்படுத்துவதுடன், சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. குடல் புழுக்களை அழிக்கிறது.
முக்கியமாக நிறைய பேர் இளநீர் சாப்பிடும் பொழுது அதில் உள்ள நீரை மட்டும் குடித்துவிட்டு, இளநீரில் உள்ள இளந்தேங்காய் பகுதிகளை சாப்பிடமாட்டார்கள். உண்மையில் அந்த வழுக்கை பகுதி உடலில் வறட்சித் தன்மையை போக்கும். உண்மையில் இளநீரின் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால் வழுக்கையோடு சேர்த்து உண்பது நல்லது.
எல்லோருக்கும் உள்ள ஒரு சந்தேகம் இளநீரை எந்த நேரத்தில் குடித்தால் நல்லது..!
எப்பொழுது வேண்டுமென்றாலும் குடிக்கலாம். ஆனால் அது சரியான நேரத்தில் குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் இரட்டிப்பாகும். அந்த வகையில் உள்ள கனிமங்கள் மற்றும் தாது உப்புகளை முழுவதுமாக நம் உடல் ஏற்றுக் கொள்ள இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது. பொதுவாக அதிக காரத்தன்மை கொண்டது.
உடலுக்கு சூட்டை கொடுக்கக்கூடிய பித்தத்தை அதிகப்படுத்தக் கூடிய உணவுகளை தான் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இளநீர் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது பித்தத்தைத் தணிக்கக் கூடியது அதனால் வெறும் வயிற்றில் குடிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை. அதே போன்று 3 வயது குழந்தையிலிருந்து யார் வேண்டுமென்றாலும் இளநீரை குடிக்கலாம்.
அதே நேரத்தில் சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்களும், இளநீர் அருந்தக்கூடாது. பொதுவாக உடலுக்கு கெடுதலை தரக்கூடிய உணவுகளை விலை அதிகம் கொடுத்து வாங்கி சாப்பிடுகிறீர்கள் அது கெடுதல் என்று தெரிந்தும். ஆனால் இது போன்று உடலுக்கு நன்மை தரக்கூடிய விலை குறைவு என்று வாங்க மறுத்து விடுவோம்.
இது போன்ற ஏராளமான நன்மைகளை அள்ளித்தரும் இளநீரை எவ்வளவு விலை விற்றாலும் யோசிக்காமல் வாங்கி சாப்பிடுங்கள். தினமும் ஒன்று சாப்பிட்டால் கோடையில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுத்து மருத்துவ செலவுகளை குறைக்கும் என்பது தான் உண்மை. நீங்கள் தினமும் ஒரு இளநீர் சாப்பிட்டு அதன் மருத்துவப் பலனை பெற்றிடுங்கள்.