மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அத்தியூத்து கிராமத்தில் முதியவரான பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆலங்குளம்-தென்காசி நெடுஞ்சாலையில் இளநீர் கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பெரியசாமி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனது கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பெரியசாமியின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பெரியசாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்