Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளநீர் பறித்த போது நடந்த பரிதாபம்… 30 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மரணம்…!!

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டம், அம்பத்தூர் அருகில் அயப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் பார்த்தசாரதி(39). இவருடைய மனைவி கலைவாணி. மனைவியை பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக பார்த்தசாரதி தனியாக வாழ்ந்து வந்துள்ள நிலையில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கள்ளிக்குப்பம், மேற்கு பாலாஜி நகர் முதல் பிரதான ரோட்டில் நேற்று சென்றுகொண்டிருக்கும்போது அங்கு இருந்த தென்னை மரத்தை பார்த்தார்.

அப்போது அங்கு வாடகைக்கு இருந்த நாகராஜன் என்பவரிடம் தென்னை மரத்தில் உள்ள தேங்காய்களை பறித்துக் தருகிறேன் அதற்கு ரூ 200 மட்டும் சம்பளம் கொடுங்கள் என்று பார்த்தசாரதி கேட்டுக்கொண்டார். இதையடுத்து பார்த்தசாரதி தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறித்து கீழே போட்டார். அப்போது திடீரன்று எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி 30 அடி உயரத்தில் இருந்து பார்த்தசாரதி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த பார்த்தசாரதியை  பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பார்த்தசாரதி ஏற்கனவே இறந்ததாக கூறினார்கள். இதுகுறித்து அம்பத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து பார்த்தசாரதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |