Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இளநீர் விற்று அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் கொடுத்த பெண்மணி”…. குவியும் பாராட்டு….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை-திருப்பூர் சாலையில் தாயம்மாள் என்ற பெண்மணி தனது கணவருடன் சேர்ந்து இளநீர் விற்பனை செய்து வருகிறார். இவர்களுடைய பிள்ளைகள் சின்னவீரம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு நாள் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் அந்த பள்ளியில் நடந்துள்ளது. அப்போது ஆசிரியர்கள் வகுப்பறை கட்ட நிதி திரட்டுவதில் பெரும் சிக்கல் இருப்பதாக கூறியுள்ளனர்.

அதனைக் கேட்ட தாயம்மாளும் அவருடைய கணவரும் இளநீர் விற்று சேமித்த பணம் ரூ.1 லட்சத்தை அரசு பள்ளிக்கு தங்களது பங்களிப்பாக வழங்கியுள்ளனர். அதனை அறிந்த பலரும் அந்த பெண்மணிக்கும், அவருடைய கணவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உடுமலைப்பேட்டை தாயம்மாளின் உயர்ந்த எண்ணம் குறித்து மனதின் குரல் எனும் மன்கீபாத் நிகழ்ச்சியில் பாராட்டி பேசியுள்ளார்.

Categories

Tech |