Categories
உலக செய்திகள்

“இளமையா, ஆரோக்கியமா” வாழணுமா…? “இனி டயட் வேண்டாம்”… இத செய்யுங்க …. நிபுணர்களின் மாஸ் ஆலோசனை….!!

இங்கிலாந்து நிபுணர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிக எளிமையான பல வழிகளை தெரிவித்துள்ளார்கள்.

இங்கிலாந்து நிபுணர்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட காலம் இளமையாக வாழ்வதற்கும் தேவையான மிக எளிமையான பல வழிகளை கூறியுள்ளார்கள். அதன்படி முதலாவதாக உணவு கட்டுப்பாட்டை விட உடற்பயிற்சிக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று லண்டனிலுள்ள கிங்ஸ் காலேஜ் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் உடற்பயிற்சி செய்யும் போது இன்சுலின் உடலில் இருக்கும் குளுக்கோஸை எடுத்துக் கொள்ளும்படி தசைகளை தூண்டுவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தையும், வாரத்திற்கு ஒருமுறை நாடித்துடிப்பையும பரிசோதித்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்பு கட்டாயமாக ஒரு காபி பிரேக் எடுக்கும்படி டாக்டர் தாமஸ் கூறியுள்ளார். அதாவது நாளொன்றுக்கு 2 முதல் மூன்று 3 கப் வரை அளவோடு காபி குடித்தால் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் குறையும் என்று புடாபெஸ்ட் பல்கலைக்கழக ஆய்வு கூறுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நீச்சல், வேகமான நடைப்பயிற்சி மற்றும் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களால் சுவாச மண்டலத்திற்கும், இதயத்திற்கும் நல்ல பலன் கிடைக்கும் என்று சர்ரே பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆகையினால் நாளொன்றுக்கு கட்டாயமாக 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது அனைவருக்கும் மிகுந்த பயனளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |