உத்திரபிரதேசத்தில் மூதாட்டி ஒருவர் தினசரி 5 கிலோமீட்டர் தூரம் வரை தன் சைக்கிளில் சென்று பால் விற்பனை செய்துவருகிறார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கஸ்கஞ்ச் சென்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷீலா தேவி. மூதாட்டியான இவர் கடந்த 22 வருடங்களாக அருகிலுள்ள கிராமங்களுக்கு தன் சைக்கிளில் 5 கிலோமீட்டர் தூரம் வரை சென்று பால் விற்பனை செய்கிறார். இவருக்கு திருமணம் முடிந்த ஒரு வருடத்திலேயே கணவன் இறந்துள்ளார். இதனால் ஷீலா மன வேதனையடைந்தாலும் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்தமாக தொழில் செய்ய முடிவெடுத்துள்ளார். இதனால் தன் சொந்த கிராமத்திற்கு சென்று தந்தையின் நிலத்தில் விவசாயம் செய்துள்ளார். அந்த நேரத்தில் அவரின் பெற்றோர்களும் இறந்துவிட்டனர். அப்போதும் மனம் தளராத ஷீலா தன் தொழுவத்தில் எருமைகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்துள்ளார்.
அதன் பிறகு உள்ளூரில் இருக்கும் சில வீடுகளுக்கு பால் விற்பனையும் செய்து வந்துள்ளார். மேலும் தன் விடா முயற்சியால் அயராது உழைத்து தற்போது கடைகளுக்கும் பால் விற்பனை செய்து வருகிறார். எனினும் 62 வயதாகும் சீலா தன் இளமை காலங்களில் எப்படி உழைத்தாரோ அதைப் போலவே ஓடி உழைத்து வருகிறார். மேலும் உழைத்து வாழ்வதே பெருமை என்று கூறியுள்ளார். மேலும் அப்பகுதி மக்கள் இவரை “ஷீலா ஆன்ட்டி” என்று பாசமாக அழைக்கிறார்கள். மேலும் வயதான காலத்திலும் கூட அயராது உழைக்கும் இந்த மூதாட்டிக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.