இளமையான தோற்றம் வேணுமா இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :
உணவின் சுவையை அதிகரிக்க அல்லது வாய் ஃப்ரெஷனராகப் பயன்படுத்தப்படும் பெருஞ்சீரகம் அல்லது சோம்பு தான் அந்த பொருள இன்று பெருஞ்சீரகம் தேநீர் பற்றி தான் பார்க்கப் போகிறோம் நீங்கள் பெருஞ்சீரகம் தேநீர் எடுத்துக் கொண்டால், இது நம் உடலின் பல நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது மட்டுமல்லாமல், இது அமிலத்தன்மை, வாயு, மலச்சிக்கல் மற்றும் பல கோளாறுகள் போன்ற வயிற்று கோளாறுகளையும் நீக்குகிறது.
அதை தயாரிக்க, நீங்கள் ஒரு பாத்திரத்தில் ஒரு பெரிய கப் தண்ணீரை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை போடவும். அந்த நீரின் நிறம் மாறும் வரை கொதிக்க விடவும்.. நீர் நிறம் மாறியவுடன், உங்கள் பெருஞ்சீரகம் தேநீர் தயாராகிவிட்டது. பின்னர் அதனை வடிகட்டி விட்டு அருந்தலாம்.. இதனை தினமும் குடிப்பதன் மூலம் முக நிறத்தை மேம்படுத்துவதுடன், கல்லீரலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.