வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள வேலுசாமி புரத்தில் வருண் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு சுவேதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வருண் தனது தந்தை அய்யாசாமி, தாய் பிரபா, சகோதரி சுஷ்மிதா ஆகியோருடன் இணைந்து வரதட்சணை கேட்டு சுவேதாவை கொடுமைப்படுத்தியுள்ளார்.
மேலும் 4 பேரும் இணைந்து சுவேதாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சுவேதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வருண் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.