இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய பூசாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முருகேசபுரத்தில் ஜெயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் பூசாரியாக இருக்கிறார். அவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஜெயகுமார் அதே பகுதியில் வசிக்கும் 19 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் கர்ப்பமான அந்த இளம்பெண்ணுக்கு நேற்று மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.