புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூரில் கூலி தொழிலாளியான ஜானகிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 21 வயது இளம்பெண்ணுடன் நட்பாக பழகி திருமணம் செய்து கொள்வதாக பின்னர் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமான பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜானகிராமனிடம் கூறியுள்ளார். அப்போது திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து ஜானகிராமன் இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து இளம் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக இளம்பெண் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜானகிராமனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் ஜானகிராமனுக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.