Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!!!

தொழிலாளியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் இருக்கும் பழக்கடையில் குப்புசாமி என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டிற்கு முன்பு ரத்த காயங்களுடன் பிறந்த குப்புசாமியின் உடலை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் அருண்குமார் என்பவருடன் குப்புசாமி மது அருந்தியது தெரியவந்தது. இதனால் அருண்குமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருண்குமாருக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் அருண்குமார் அடிக்கடி சந்தித்து நீண்ட நேரம் பேசி வந்ததை குப்புசாமி பார்த்துள்ளார். இந்நிலையில் குப்புசாமி மது அருந்து கொண்டிருக்கும்போது அருண்குமார் அங்கு சென்றுள்ளார். அப்போது இளம் பெண்ணுடன் பழகுவது குறித்து குப்புசாமி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கோபத்தில் அருண்குமார் குப்புசாமியை கல்லால் அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Categories

Tech |