Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்…. இரும்பு வியாபாரி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செங்கொடிபுரத்தில் 26 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டியில் வசிக்கும் பழைய இரும்பு வியாபாரியான ராமதாஸ்(34) என்பவருக்கும் இளம்பண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ராமதாஸ் இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார்.

பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் கூறியதற்கு ராமதாஸ் மறுப்பு தெரிவித்து அவரை ஏமாற்றிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் ராமதாஸ் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |