Categories
தேசிய செய்திகள்

இளம்பெண்ணை கடத்திச்சென்று…. மதமாற்ற கட்டாயப்படுத்திய இளைஞர்…. மதமாற்ற தடை சட்டத்தில் கைது…!!!

இளம் பெண்ணை கடத்திச் சென்று மதமாற்றம் செய்து திருமணம் செய்ய முயற்சி செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத்தில் திருமணம் செய்வதற்காக கடத்தப்பட்டோ அல்லது ஏமாற்றியோ மதமாற்றம் செய்து திருமணம் செய்தால் தண்டனைக்குரியது என்று சட்டம் இயற்றப்பட்டது. இது இயற்றப்பட்டு ஒருவாரத்திற்குள் அந்த சட்டத்தின் கீழ் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான அன்சாரி என்ற குஜராத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை கடத்திச் சென்றுள்ளார். மேலும் தனது மாதத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்தி, திருமணம் செய்து கொள்ளவும் வற்புறுத்தியுள்ளார்.

பின்னர் மகளை காணவில்லை என்று இளம் பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே இதனை விசாரணை செய்த காவல்துறையினர் அவர்களின் செல்போன் சிக்னலை வைத்து ஆராய்ந்து மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இருவரையும் கைது செய்தனர். பின்னர் குஜராத் மாநிலத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில், அந்த பெண் தன்னை அன்சாரி மதம் மாற்றவும், திருமணம் செய்யவும் கட்டாய படுத்துவதாக தெரிவித்தார். இதையடுத்து இமான் அன்சாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

Categories

Tech |