விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு கருப்பசாமி அதே பகுதியில் வசிக்கும் இளம்பண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து கருப்பசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூரண ஜெய ஆனந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் கருப்பசாமிக்கு 8000 ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு 2 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.
Categories