சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி நைனாக்காடு பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுஶ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அனுஸ்ரீக்கு கௌதம் நந்தா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கௌதம் அவரது தந்தை தங்கராஜ், தாய் அருள்மணி ஆகியோர் வரதட்சனை கேட்டு அனுஶ்ரீயை துன்புறுத்தியுள்ளனர். இதனால் அனுஸ்ரீ தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். மேலும் விவாகரத்து கேட்டு கணவருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது.
கடந்த மாதம் 23-ஆம் தேதி அனுஶ்ரீ தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரவி அளித்த புகாரின் பேரில் போலீசார் கௌதம் நந்தா, தங்கராஜ், அருள்மணி ஆகிய 3 பேர் மீது பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். நேற்று தலைமறைவாக இருந்த கௌதம் நந்தாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.