Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணை மிரட்டிய முதியவர்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராசு(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 19 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என ராசு அந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இந்நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது இளம்பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பெற்றோர் விசாரித்த போது இளம்பெண் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினர் ராசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |