பூசாரி ஒருவர் தனது கனவில் வந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் மகன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, அங்கு உள்ள காளி கோவில் பூசாரி பிரசாத் சதுர்வேதி என்பவரை சந்தித்துள்ளார். அவர் ஒரு மந்திரத்தை சொல்லிக் கொடுத்து, சில சடங்கு முறைகளையும் செய்யுமாறு கூறியுள்ளார். இருப்பினும் அவரது மகன் அடுத்த 15 நாட்களில் உயிரிழந்துவிட்டார். பின்னர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அந்த பெண், பூசாரி மீது ஒரு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் பூசாரி தனது கனவில் வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகவும், அதனை தனது இறந்த மகன் தடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட காவல்துறையினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பூசாரி சதுர்வேதி அவர்களை அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது அந்த பெண் யார் என்பது எனக்கு தெரியாது என்று அவர் கூறிவிட்டார். மகன் இறந்து போனதால் மனநிலை பாதிக்கப்பட்டு இப்படி ஆகி உள்ளார் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஆனால் அந்த பெண் கொடுத்த புகார் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.