Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இளம்பெண் அளித்த புகார்…. சிறை காவலர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை….!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரம்பட்டி கிராமத்தில் விக்னேஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் புது டெல்லியில் இருக்கும் திகார் சிறையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019- ஆம் ஆண்டு விக்னேஷுக்கும், நிவேதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது நிவேதாவின் பெற்றோர் 2 லட்ச ரூபாய் பணம், 33 பவுன் தங்க நகை ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் விக்னேஷின் குடும்பத்தினர் கூடுதலாக 40 பவுன் நகை மற்றும் ஒரு காரை வரதட்சணையாக கேட்டு நிவேதாவை கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதனை அடுத்து பெற்றோர் வீட்டிற்கு சென்ற நிவேதாவை உறவினர்கள் சமாதானப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் மனைவியை புதுடெல்லிக்கு அழைத்துச் செல்ல விக்னேஷ் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் நிவேதா தர்மபுரி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார். இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டதால், தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் விக்னேஷ் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |