விருதுநகரில் ஒருவர் கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் உள்ள அருப்புக்கோட்டை அருகே கூத்திப்பாறை பகுதியை சேர்ந்த சத்யபிரியா என்பவருக்கும், மதுரையைச் சேர்ந்த வசந்த் பாண்டி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சத்திய பிரியா பிரசவத்திற்காக தனது அம்மா வீட்டிற்கு வந்து குழந்தை பெற்றும் தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார். இதனிடையே சத்தியபிரியாவுக்கும் அவரது ஊரில் உள்ள ஞானகுருசாமி என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனிமையில் இருந்தும் வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரியா தன் கழுத்தில் தாலி கட்டுமாறு ஞானகுரு சாமியை கேட்டுள்ளார். இல்லையேல் நீ தான் காரணம் என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் எனவும் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் திடீரென வேலைக்கு சென்ற மகளை காணாததால் சத்யாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்துள்ளனர். இதனால் காவல்துறையினர் கடந்த 8 மாதங்களாக சத்தியப் பிரியாவை தேடி வந்த நிலையில் விசாரணையில் ஞானகுருசாமியிடம் பேசிய தெரிய வந்தது. இதுகுறித்து ஞானகுருசாமியிடம் விசாரிக்கும்போது திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்யதால் அவரது துப்பட்டாவை வைத்து கழுதை நெரித்து கொலை செய்தேன் என்றும் உடலையே அங்கேயே புதைத்து விட்டேன் என்றும் கூறியுள்ளார். அதன்பின் காவல்துறையினர் சத்திய பிரியாவின் உடலை மீட்டுள்ளனர்.