Categories
தேசிய செய்திகள்

இளம்பெண் சடலமாக மீட்பு… தாய் செய்த கொடூரம்… அதிர்ச்சி பின்னணி …!!

இளம்பெண் ஒருவரை அவரின் தாயாரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒடிசாவில் கடந்த ஜனவரி 18-ம் தேதி அன்று நாகிராம் என்ற கிராமத்தில் உள்ள பாலத்திற்கு அடியில் ஒரு இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பெண்ணின் உடல் முழுவதும் கற்கள் போன்ற கடினமான பொருட்களால் கொடூரமாக தாக்கப்பட்டதற்கான அடையாளம் தெரிந்துள்ளது. இதுதொடர்பாக பலாசூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அதன்படி, கொலை செய்யப்பட்ட இளம்பெண் பலாசூர் என்ற ஊரைச் சேர்ந்த ஷிபானி நாயக் (36) என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பிரமோத் ஜனா (32) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கூறியுள்ளதாவது, “நானும் என் கூட்டாளிகள் இருவரும் சேர்ந்து இந்த கொலையை செய்தோம்” என்று ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளது.

அதாவது ஷிபானி நாயக்கின் தாயார் சுகிரி கிரி (58) என்பவர்தான் பணத்தை கொடுத்து கொலை செய்த சொன்னார் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இதற்காக 50,000 ரூபாய் கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் முன்பணமாக 8000 கொடுத்தார் என்றும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஷிபானியின் தாயார் சுகிரி கிரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தன் சொந்த மகளையே தாய் கொலை செய்வதற்கான காரணம் என்ன என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அதில் ஷிபானியின் தாயார் கூறியுள்ளதாவது, “என் மகள் சட்டவிரோதமாக மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். நான் அவரை பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை தொடர்ந்து நடத்தி வந்தார். மேலும் பல்வேறு வழிமுறைகளில் அவரை அந்த தொழில் இருந்து மீட்க போராடியும் அனைத்தும் பலனின்றி போனதால் வெறுப்பின் உச்சத்திற்கு ஆளானேன். இதனால்தான் என் மகளை கொலை செய்ய முடிவு செய்தேன்” என்று கூறியுள்ளார். மேலும் இக்கொலையில் தொடர்புடைய மற்ற 2 நபர்கள்  தலைமறைவாகியுள்ளனர். அவர்களை விரைவில் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |