Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இளம்பெண் தற்கொலை வழக்கு…. கணவர்-மாமியாருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் மற்றும் மாமியாருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூரில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு ராஜசேகருக்கு பிரீத்தா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ராஜசேகரும், அவரது தாய் சகுந்தலாவும் இணைந்து கூடுதலாக வரதட்சணை கேட்டு பிரீத்தாவை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரீத்தா கடந்த 2011-ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து சமயநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து ராஜசேகர் மற்றும் சகுந்தலா ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை மகளிர் நீதிமன்றம் ராஜசேகருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் சகுந்தலாவுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.

Categories

Tech |