சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி செல்லப்பா தெருவில் பாலசுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா(36) என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு கர்ப்பப்பையில் கட்டி இருந்ததால் அதற்கான அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் வயிறு வலி அதிகமாக இருந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதி கவிதா தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து போலீசார் கவிதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து பிரேத பரிசோதனையின் போது கவிதாவின் ஜாக்கெட்டில் இருந்த கடிதத்தை பார்த்த மருத்துவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் எனது சாவுக்கு வீட்ட அருகே வசிப்பவர் மற்றும் அவரது உறவினர்கள் தான் காரணம் என கவிதா எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் கவிதாவுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரஞ்சித் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதால் ரஞ்சித் கவிதாவை தாக்கியுள்ளார். இதனால் மன உளைச்சலில் கவிதா தற்கொலை செய்துள்ளார். இதனை வெளியே கூறினால் அவமானம் என நினைத்து வயிற்று வலியால் கவிதா தற்கொலை செய்து கொண்டதாக பாலசுப்பிரமணி நாடகமாடியுள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.