சேலம் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டரை வயதில் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் பூஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் வீட்டில் சோதனை நடத்தி பூஜா எழுதிய கடிதத்தை கைப்பற்றினார்.
அந்த கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை கட்ட முடியவில்லை. மேலும் எனக்கு அடிக்கடி முதுகு வலி ஏற்பட்டது என கடிதத்தில் எழுதியுள்ளார். அந்த கடிதத்தின் உண்மை தன்மை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.