Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“இளம்பெண் பாலியல் பலாத்காரம்” தொழிலாளர்களுக்கு உடந்தையாக இருந்த மூதாட்டி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளர்களான அண்ணாதுரை(56), ராஜேந்திரன்(45) ஆகிய இருவரும் அதே பகுதியில் வசிக்கும் அஞ்சலை(60) என்ற பெண்ணின் வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பெரிய வழக்கு பதிந்த போலீசார் அண்ணாதுரை, ராஜேந்திரன், அஞ்சலை ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அண்ணாதுரை ராஜேந்திரன், அஞ்சலை ஆகிய 3 பேருக்கும் தலா 31 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், தலா ஒன்றரை லட்ச ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 6 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் தொகையை நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |