மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை அதை பகுதியை சேர்ந்த சிலர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் முனியாண்டி(56), முருகன்(59), விக்னேஸ்வரன்(29), நாகப்பாண்டி(27), பழனிவேல்(29), சங்கர்(31) ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது முருகன் இறந்து விட்டதால் மற்ற ஐந்து பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.