இளம் பெண் மீது ஆசிட் வீசி விட்டு தலைமறைவாக இருந்த வாலிபரை கர்நாடக தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருக்கும் சுங்கத்கட்டே பகுதியில் வசித்து வரும் நாகேஷ் என்பவன் ஆயத்த ஆடை துணியகம் நடத்தி வருகின்றார். அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இளம்பெண் பணியாற்றி வருகின்ற நிலையில் நாகேஷ் அந்த பெண்ணை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்திருக்கிறார். மேலும் அந்தப் பெண் வேலை பார்க்கும் அலுவலகம், அவரது வீடு உள்ளிட்ட இடங்களுக்கு அடிக்கடி சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை கூறிய தொந்தரவு செய்து இருக்கின்றார்.
சென்ற 28 தேதி காலையிலும் அந்தப் பெண் வேலைக்கு வந்த பொழுது நாகேஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து நாகேஷ் கையில் இருந்த ஆசிட்டை அந்த இளம் பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசியதால் அந்தப் பெண் படுகாயம் அடைந்ததையடுத்து அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இதற்கிடையே நாகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதனால் கர்நாடக போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் நாகேஷ் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆசிரமத்தில் சாமியார்கள் உடன் சேர்ந்து காவி நிற உடை அணிந்து சுற்றித் திரிந்தது தெரியவந்ததையடுத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்தார்கள்.