நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுசுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் D 43, நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன்-2, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ராட்சசன் பட இயக்குனருடன் ஒரு படம் என ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகர் தனுஷ் கோலிவுட்டில் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.
விரைவில் இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் நடிகர் தனுஷ் புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கி பிரபலமடைந்த இளன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.