தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். பீஸ்ட் படத்தின் வெற்றியே தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து லோகேஷ் கனகராஜின விஜய் 67 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் விஜய் 53 வயது மதிக்கத்தக்க கேங்ஸ்டராக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து அட்லி, லோகேஷ் கனகராஜ் என இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார். அதன்படி தற்போது அடுத்ததாக மே மாதத்தில் அறிமுகமான டான் படத்தின் இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது விஜய் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியிடம் கதை கேட்டதாகவும், அவரும் விஜய்க்கான கதையை தற்போது உருவாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.