Categories
உலக செய்திகள்

இளம் கொரோனா நோயாளி…. 37 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தை பலி…. கிரீஸ் பிரதமர் வேதனை…!!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு விஞ்ஞானிகள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகிறனர். இதில் ஒரு சில தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வரும் நிலையில் அதன் வீரியம் சற்று அடங்கியது. ஆனாலும் தற்போது உருமாறிய கொரோனா, கொரோனா இரண்டாவது அலை என்று மாறி மாறி பரவி மக்களை வாட்டி எடுத்து வருகிறது. எண்ணிலடங்கா உயிர் பலிகளையும் கொரோனா எடுத்துக்கொண்டது. இந்நிலையில் கிரீஸ் நாட்டில் பிறந்து 37 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனாவால் உயிரிழந்துள்ளது.

இந்த குழந்தை பிறந்து 17 முதல் 36 நாட்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருந்துள்ளது. இதையடுத்து தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதுகுறித்து கிரீஸ் பிரதமர் கிரியகோஸ் மிட்ஸோடகிஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்த நாளில் நம்முடைய நாட்டின் இளம் கொரோனா நோயாளி மறைந்துவிட்டார், இந்த துயரத்தை தாங்கவே முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |