Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இளம் நடிகருக்கு ஜோடியாகும் அனுஷ்கா… வெளியான புதிய தகவல்…!!!

நடிகை அனுஷ்கா இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் விஜய், அஜித், ரஜினி, சூர்யா போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் அருந்ததி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தனது கம்பீரமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார் . கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சைலன்ஸ் திரைப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை . நடிகை அனுஷ்கா தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

Anushka Shetty and Naveen Polishetty as lovers! | Telugu Cinema

இந்நிலையில் நடிகை அனுஷ்கா அடுத்ததாக ரொமான்டிக் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மகேஷ் இயக்கும் இந்த படத்தில் இளம் நடிகர் நவீன் பாலிசெட்டி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு ‘மிஸ் செட்டி – மிஸ்டர் பாலிசெட்டி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |