நடிகை சாரா அலிகான் தனுஷின் கையை பிடித்தவாறு போஸ் கொடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜோடி சூப்பர் என தெரிவித்து வருகின்றனர்
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்கியுள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ் ஹாலிவுட் பட நிகழ்ச்சிக்கு வேட்டி, சட்டை அணிந்து வந்து பாரம்பரிய உடை குறித்து உலக அளவில் பேச வைத்தார். இத்திரைப்படம் சென்ற 22-ஆம் தேதி ஓடிடியில் வெளியானது.
#Rinku and #Vishu reunion! ❣️💕#AtrangiRe leads #SaraAliKhan and #Dhanush snapped in a candid moment as they arrive for a dinner party. pic.twitter.com/6xdyL2YIWx
— Filmfare (@filmfare) July 22, 2022
இந்த நிலையில் ரூஸோ சகோதரர்கள் மற்றும் தனுசுக்கு தனது வீட்டில் தயாரிப்பாளர் ரித்தீஷ் சித்வானி பார்ட்டி கொடுத்தார். அந்தப் பார்ட்டியில் சாரா அலிகான், அனன்யா பாண்டே, மலாய்கா அரோரா, ஷாஹித் கபூர், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் பங்கேற்றார்கள். அப்போது புகைப்படக்கலைஞர்களுக்கு பார்ட்டிக்கு வந்தவர்கள் போஸ் கொடுத்தார்கள். சாரா அலிகானோ தனுஷின் கையை பிடித்தவாறு நடந்து வந்து போஸ் கொடுத்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த ஜோடி சூப்பர் என தெரிவித்து வருகின்றார்கள்.