மேற்கு வங்கத்தில் நடிகையும் மாடலுமான பிதிஷா டி மஜூம்தார்(21) தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். நாகர்பஜாரில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவருடைய தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சமீபகாலமாக இளம் நடிகர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. அவரது குடியிருப்பிலிருந்து தற்கொலைக் குறிப்பு ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி பிதிஷாவுக்கு அனுப்பாய் பேரா என்ற காதலர் இருந்துள்ளார். அவருடனான நட்புரவால் பிதிஷா மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கொல்கத்தாவில் 10 நாட்களுக்குள் இரண்டு பிரபல நடிகைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.