Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இளம் பெண்ணின் புகைப்படம்…. தவறாக சித்தரித்து மிரட்டிய ஊழியர்…. ஈரோட்டில் பரபரப்பு….!!!

இளம்பெண்ணை மிரட்டிய ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே ஒலக்கடம் பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தர்மலிங்கம் தன்னுடைய நண்பர் சரண்குமாருடன் சேர்ந்து இளம் பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்துள்ளார். இந்த புகைப்படத்தை அந்த பெண்ணிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இது குறித்து இளம்பெண் தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து இளம் பெண்ணின் பெற்றோர் பவானி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தர்மலிங்கத்தை கைது செய்துள்ளனர். மேலும் சரண்குமாரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |