இளம் பெண்ணை கடத்திச் சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் ரொட்டி தோப்பு பகுதியை சேர்ந்த அப்பு என்பவர் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் சில நாட்களுக்கு முன்பாக ஆம்பூர் பகுதி சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக சொல்லப்படுகின்றது.
இதுப்பற்றி பெண்ணின் தாயார் ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அப்புவை கைது செய்துள்ளனர்.