Categories
உலக செய்திகள்

இளம் பெண் கொலை வழக்கில் கைதான போலீசார் ..பலத்தகாயத்துடன் சுயநினைவில்லாமல் கிடந்தார் ..!! காரணம் என்ன?

லண்டனில் இளம்பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் தலையில் படுகாயமடைந்து சுயநினைவில்லாமல் கிடந்துள்ளார்.

லண்டனை சேர்ந்த சாரா எவெரெர்ட் என்ற இளம்பெண் மாயமான நிலையில் அவருடைய உடல் பாகங்கள் என்று கருதப்படும் உறுப்புகள்  கிடைத்துள்ளது. அந்த உடல் பாகங்கள் மிகவும் மோசமாக சேதமடைந்ததால் அதிலுள்ள பற்களை வைத்து தான் இது சாரா உடைய உடல்  பாகமா என்றும் கண்டுபிடிக்க முடியும். மேலும் அப்படி கண்டுபிடிப்பதற்கு பல வாரங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சாராவின் கொலை வழக்கில் வெயின் கோசேன்ஸ் என்கிற போலீஸ் அதிகாரியை போலீசார் கைது செய்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வெயின் கோசேன்ஸ் தலையில் பலத்த காயத்துடன் சுய நினைவில்லாமல் கிடந்துள்ளார். உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்த பிறகு மீண்டும் காவலில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் யாரும் செல்லாத நிலையில், ‘அவர் தன்னை தானே காயப்படுத்திக் கொண்டாரா என்பது பற்றி தெரியவில்லை’ என்று போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |