இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மாமனார் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் தியாகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு தனுஸ்ரீ(26) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனுஸ்ரீக்கு கீர்த்தி ராஜா(31) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த கீர்த்தி ராஜா கிரிக்கெட் மட்டையால் தனுஸ்ரீயை அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கீர்த்தி ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கீர்த்தி ராஜாவின் தந்தை பெரியசாமி, தாய் ரஞ்சனி ஆகியோர் வரதட்சனை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து பெரியசாமி மற்றும் ரஞ்சனி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.