இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உருமாறிய கொரோனாவாக இருக்கலாம். எனவே இதை படித்து உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா பெறும் தொற்று பல உலக நாடுகளையும் உலுக்கி வருகிறது. பல்வேறு நாடுகளும் இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, தொடர்ந்து கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்தது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது.
தற்போது உருமாறிய கொரோனா இருப்பதாகவும், அது பலருக்கும் பரவி உயிர் கொல்லியாக மாறி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது உருமாறிய கொரோனாக்கு புதிய வகை அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உருமாறிய கொரோனா வைரஸ் வாய் வழியாக எளிதாக பரவி வருகிறது. அவை, பல் இடுக்கு, பற்குழி, நாக்கு பகுதி, தொண்டை உள்ளிட்ட பகுதிகளில் அமர்ந்து பெருகுகிறது. எனவே வாய்ப்புண், வாய் நாற்றம், வாயின் மேல் தாடை பகுதியில் எரிச்சல், தொண்டை புண் நாக்கின் மேல் வெடிப்பு, வீக்கம், வரட்சி உள்ளிட்டவை போன்றவை அறிகுறிகள்.
உடல் சோர்வு, உடல் வலி, தலை சுற்றல் ஆகியவை இருக்கும். நாம் மிகவும் பலவீனமாக இருப்பது போல் தோன்றும். எப்பொழுதும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அத்துடன் குமட்டல், உடல்நலக் குறைவும் ஏற்படும்.
தசைகளில் ஒருவித வலி, உடல் வீக்கம், மூட்டுவலி ஆகியவை இருக்கும். திடீரென சோம்பலாக இருக்கும் . வயிற்று வலியும் ஏற்படும். இதுபோன்ற அறிகுறி இருந்தால் கொரோனா வைரஸ் உருமாற்றம் உங்களைத் தாக்கி இருக்கக்கூடும் என்று அர்த்தம். அப்படி உங்களுக்கு இருந்தால் உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.