Categories
சினிமா தமிழ் சினிமா

இளம் வயதில் நண்பர்களுடன் தல அஜித்… வெளியான சூப்பர் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் இளம் வயதில் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. ஹெச.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸாகும் என அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர் . இதனிடையே அவ்வப்போது நடிகர் அஜித்தின் அறிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இளம் வயதில் நடிகர் அஜித் தனது நண்பர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது . அந்த புகைப்படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியன் அவர்களின் மகன்  எஸ்பிபி சரண் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |