Categories
உலக செய்திகள்

இளம் வயதில் முடிசூடிய பிரிட்டன் இளவரசி….. காதலால் சுழன்ற சாம்ராஜ்யம்…. சுவாரஸ்ய தொகுப்பு இதோ….!!!!!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் காலாமானார். அவருக்கு வயது 96. ”சூரியன் மறையாத சாம்ராஜ்யம்” என்று புகழாரம் சூட்டப்பட்டு, உலகின் பெரும்பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்த பிரிட்டனின் ராணி என்றால் சும்மாவா? என்கின்ற அளவுக்கு பெரிய பொறுப்பு, பதவி, பெருமை, மரியாதை ஆகியவற்றை உடையவர்.  பிரிட்டன் வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக இருந்த பெருமையை இரண்டாம் எலிசபெத் பெற்றிருக்கிறார். மன்னராட்சி ஆட்சி என்றால் வழக்கமாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் ஆட்சிக் கட்டிலில் அமருவார்கள். அதாவது தந்தை, மகன், பேரன், கொள்ளு பேரன், எள்ளு பேரன். ஆனால் எதிர்பாராத திருப்பத்துடன் பிரிட்டன் ராணியாக முடிசூடும் வாய்ப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். கடந்த 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி லண்டனில் உள்ள பெர்க்கலீ சதுக்கம் அருகில் உள்ள வீட்டில் பிரிட்டன் மன்னர் 5 ஆம் ஜார்ஜின் இரண்டாவது மகன் யார்க் கோமகன் ஆல்பர்ட் மற்றும் அவரது மனைவி எலிசபெத் போஸ் லயன் ஆகியோருக்கு முதல் குழந்தையாக பிறந்தவர் எலிசபெத் அலெக்சாண்ட்ரா மேரி வின்ட்சர். இவரின் இளைய சகோதரியான மார்கரெட் ரோஸும், எலிசபெத்தும் மிகவும் அன்பான சூழலில் வளர்ந்தவர்கள். இவர்கள் வீட்டிலேயே கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. மொழிகள் மீது ஆர்வமும், ஆழ்ந்த அறிவும் பெற்றனர்.

அதனை தொடர்ந்து எலிசபெத் சிறுவயது முதலே மிகவும் பொறுப்புடன் இருந்தார். இவர் வயது பெண்களோடு பழகுவதற்காக ”ஃபர்ஸ்ட்  பக்கிங்ஹாம் பேலஸ்” என்ற பெயரில் சிறப்பு சாரணியர் அணி உருவாக்கப்பட்டது. அதன்பிறகு 1936ஆம் ஆண்டு மன்னர் 5ஆம் ஜார்ஜ் காலமானார். இதனையடுத்து மூத்த மகன் 8 ஆம் எட்வர்ட் மன்னர் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் இவரது திருமணம் பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமாக அமைந்தது. ஏனென்றால் இருமுறை விவகாரத்து பெற்ற அமெரிக்காவை சேர்ந்த வாலிஸ் சிம்ப்சன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். எனவே அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால் சில மாதங்களில் மன்னர் பதவியில் இருந்து விலகினார். அதன் பின்னர் இளையவரான யார்க் கோமகன் 6ஆம் ஜார்ஜ் மன்னர் ஆனார். இதற்கிடையில் முடியரசு மீது பிரிட்டன் மக்கள் நம்பிக்கையற்று காணப்பட்டனர். அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் புதிய மன்னரும், எலிசபெத் ராணியும் தீவிரம் காட்டினர். இவற்றையெல்லாம் மூத்த மகளான எலிசபெத் அலெக்சாண்ட்ரா மேரி வின்ட்சர் மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தார்.

இதனையடுத்து இளவரசி பட்டம் தேடி வந்தது. இந்நிலையில் தனக்கு பாதுகாவலராக வந்த கிரீஸ் இளவரசர் பிலிப் மீது காதல் வயப்பட்டார். அந்நேரம் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது எலிசபெத்தின் காதல் திருமணத்திற்கு பல்வேறு தடைகள் வந்தது. அரசு அமைப்பு, அரசு குடும்பம் என பல்வேறு விதங்களில் சங்கடங்கள் ஏற்பட்ட நிலையில் இறுதியில் எலிசபெத்தின் காதல் வென்றது. கடந்த 1947ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபே-வில் திருமணம் செய்து கொண்டனர். அடுத்த ஓராண்டில் முதல் மகன் சார்லஸ் பிறந்தார். 1950ல் ஆனி என்ற மகள் பிறந்தாள். இதற்கிடையில் தீவிர உடல்நலப் பாதிப்பிற்கு ஆளான யார்க் கோமகன் ஆல்பர்ட் காலமானார். அதன்பிறகு 1953 ஆம் ஆண்டு முடிசூட்டு விழா நடைபெற்றது. அப்போது பிலிப் மன்னராகவும், எலிசபெத் ராணியாகவும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களது முடிசூட்டு விழா பிரிட்டன் வரலாற்றில் முதல்முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதனை லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி கண்டு ரசித்தனர். மேலும் பல்வேறு தடைகள், விமர்சனங்கள், சவால்கள் ஆகியவற்றை சமாளித்து 70 ஆண்டுகள் 214 நாட்கள் பிரிட்டன் சாம்ராஜ்யத்திற்கு ராணியாக இருந்து மறைந்துள்ளார்.

Categories

Tech |