Categories
தேசிய செய்திகள்

இளம் விஞ்ஞானி திட்டத்துக்கு 150 மாணவர்கள் தேர்வு…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

இஸ்ரோ வால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இளம் விஞ்ஞானி திட்டத்திற்காக நாடு முழுவதும்  150 மாணவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி சாதனை புரிந்து வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்பது பல்வேறு குழந்தைகளின் கனவாக இருக்கிறது. இந்த நிலையில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காகவே இளம்விஞ்ஞானி திட்டத்தை இஸ்ரோ அறிமுகம் செய்து உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் தொடர்பான அடிப்படை அறிவு வழங்கப்பட இருக்கிறது. கிராமப்புறத்தில் உள்ள மாணவர்களுக்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில், விண்வெளி குறித்து மாணவர்கள் அறியவேண்டும் எனும் நோக்கில் இளம் விஞ்ஞானி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்காக 9ஆம் வகுப்பு மாணவர்கள் 150 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |