கேரளாவின் இளம் எம்எல்ஏ சச்சின் தேவும் இந்தியாவின் இளம் மேயரான ஆர்யா ராஜேந்திரனும் திருமணம் செய்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சச்சின் தேவ் (28) பாண்டிச்சேரி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.ஆர்யா ராஜேந்திரன் தனது 21 வயதில் திருவனந்தபுரம் மேயராக இருந்து வருகிறார். இந்நிலையில் இருவர் வீட்டாரின் சம்மதத்துடன் எளிமையான முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.திருமண விழாவில் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த தம்பதிக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.மேலும் திருமணத்துக்கு வருகை தருபவர்கள் பரிசு பொருட்களை தவிர்ப்பதோடு பரிசு பொருட்களுக்கான தொகையை முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுக்கும்படி மணமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.