பிரிட்டன் இளவரசர் பிலிப் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது பற்றி பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் இளவரசர் பிலிப் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மக்கள் பக்கிங்காம் அரண்மனையின் முன்பு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது தொடர்பில் பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் பொதுமக்கள் கையொப்பமிடும் இரங்கல் புத்தகம் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட இரங்கல் செய்தியை அனுப்ப விரும்புவோர் ராயல் இணையதளத்தின் இரங்கல் புத்தகம் மூலம் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இளவரசருக்கு மலரஞ்சலி செலுத்த வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக பொதுமக்கள் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்க வேண்டுமென்றும் எனவும் தெரிவித்துள்ளது