இங்கிலாந்து நாட்டின் இளவரசரான ஆண்ட்ரூ சுற்றுலா சென்றபோது பெண்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இங்கிலாந்து இளவரசர் பிலிப் மற்றும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தம்பதியரின் இரண்டாம் மகன் ஆண்ட்ரூ ஆவார். இவருடைய அண்ணன் இளவரசர் சார்லஸ் ஆவார். இளவரசர் ஆண்ட்ரூ பல பாலியல் குற்றங்களில் சிக்கியுள்ளார். இப்பொழுது இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இளவரசர் ஆண்ட்ரூ நீச்சல் உடையில் பெண்களோடு உல்லாசமாக சுற்றுலா சென்றது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இணையத்தில் வெளியான புகைப்படத்தில் குழந்தை பாலியல் வழக்கில் மிக முக்கிய குற்றவாளியான ஜெஃப்ரீ எப்ஸ்டீனும் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வெளியாகிய படம் தாய்லாந்தின் phuket தீவில் உள்ள ஒரு ஹோட்டலில் எடுக்கப்பட்ட புகைப்படம் என சொல்லப்படுகின்றது. இந்த ஹோட்டலில் தான் விஐபிகள் பலரும் சுற்றுலா வரும் பொழுது தங்குவார்கள். இந்த ஹோட்டலில் ஒரு நாள் கட்டணம் 4000 பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ 4,04,022) ஆகும்.
விர்ஜினா குய்ஃப்ரேவிடம் 2001 ஆம் ஆண்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதற்கு முன்பு இந்த சுற்றுலா நிகழ்ந்துள்ளது. ஆனால் இளவரசர் ஆண்ட்ரூ இதனை மறுத்துள்ளார். மறுத்தது மட்டுமல்லாமல், அவருக்கும் ஜெஃப்ர் எப்ஸ்டீனுக்கும் இடையே எந்த சட்ட விரோத நடவடிக்கைகளும் நடக்கவில்லை என கூறியுள்ளார்.