Categories
உலக செய்திகள்

இளவரசரை திருமணம் செய்த நடிகை…. தலைகால் புரியாமல் செய்த காரியம்…. புகார் அளித்த ஊழியர்கள்….!!

பிரிட்டன் நாட்டின் இளவரசர் மற்றும் இளவரசின மீது உதவியாளர் புகார் கொடுத்தது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் நாட்டின் இளவரசருக்கு எதிராக விசாரணை ஒன்று தொடங்கபட்டுள்ளது. இளவரசன் ஹரிக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நிகழ்ந்துள்ளது.  திருமணமான சில காலங்களில் எல்லா குடும்பத்திலும் நிகழும் பிரச்சனை ராஜ குடும்பத்திலும் ஏற்பட்டது. இளவரசரின் மனைவி மேகன் ஒரு முன்னாள் அமெரிக்க முன்னாள் நடிகை ஆவார். அவர் அரண்மனைக்கு வந்ததுமே ஒரு நாடகம் ஒன்று அரங்கேறி விட்டது. அன்று முதல் அரண்மனை தினமும் ஒரு பிரச்சனையை சந்தித்தது. இணைபிரியாமல் இருந்த ஹரியும் அவனது தம்பி வில்லியமும் ஆளுக்கொரு திசையில்  செல்லும் காட்சிகள் வெளியாகின.

தொலைக்காட்சி தொடர்களில்  நடித்து வந்த மேகன் இளவரசி ஆனதும்  கர்வம் தலைக்கேறி தலைகால் புரியாமல் ஆட ஆரம்பித்தார். அவர் உதவியாளர்களை திட்டுகிறார், கொடுமைப்படுத்துகிறார் என பல செய்திகள் வெளியாகின . இதனைக் கண்ட  மகாராணியார் மேகனை கண்டித்துள்ளார். ஆனால் மேகன் அரண்மனையுடன் ஒத்துப்போக மனமில்லாமல் இளவரசனாக வாழவேண்டிய ஹரியை இழுத்துக்கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறினார். அரண்மனையை விட்டு வெளியேறிய ஹரியும், மேகனும்  அமெரிக்க தொலைக்காட்சியில் பேட்டி ஒன்றை  அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்த பேட்டியில் ராஜ  குடும்பத்தை பற்றி என்னவெல்லாம் குறை கூறியிருப்பார் என்ற கவலை மகாராணிக்கு ஏற்பட்டது.இந்நிலையில் மேகனின் உதவியாளர் அளித்த புகாரில் மேகன் உதவியாளர்களை துன்புறுத்தியதாகவும், துரத்தியதாகவும்,அவமானப்படுத்தியதாகவும், பயத்தில் நடுங்க வைத்ததாகவும் அவர் முன் கண்ணீர்விட வைத்ததாகவும் புகாரரில் கூறப்பட்டுள்ளன.இதனால் பிரித்தானிய இளவரசரின் மீதும், அவரது மனைவியின் மீதும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |