Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப்பின் அரிய புகைப்படங்கள்.. ட்விட்டரில் வெளியிட்ட ராயல் குடும்பத்தினர்..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் மறைவிற்கு பின் அவரது அரிய புகைப்படங்கள் அரசகுடும்பத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. 

பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமான பிறகு ராயல் குடும்பத்தினர் அவருக்கு மரியாதை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது வரை வெளியிடப்படாத அவரின் அரிய புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அதாவது, பர்க்கிங்காம் அரண்மனை, வேல்ஸ் இளவரசர் மற்றும் கார்ன்வாலின் டக்சஸ் சார்லஸ், கேம்பிரிட்ஜின் டியூக், டச்சஸ் இளவரசர் வில்லியம் ஆகியோரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களில் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இளவரசர் பிலிப் தன் மனைவியான ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் தங்களின் பேரப்பிள்ளைகள் 7 பேருடன் கடந்த 2018 ஆம் வருடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.

கடந்த 2015 ஆம் வருடத்தில் இளவரசர் பிலிப் மற்றும் ராணி இரண்டாம் எலிசபெத் இருவரும் கேம்பிரிட்ஜ் டியூக், டச்சஸ், இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லோட் போன்றோருடன் எடுத்துக்கொண்டது.

இந்த புகைப்படம் இளவரசர் பிலிப் கடந்த 1966 ஆம் வருடத்தில் இளவரசர் சார்லஸ் உடன் போலோ விளையாடும் சமயத்தில் எடுத்துக்கொண்டது.

இந்த புகைப்படம் கடந்த 2011 ஆம் வருடத்தில் இளவரசர் வில்லியமின் திருமணத்தின் போது, இளவரசர் பிலிப் வேல்ஸ் இளவரசருடன் பேசி சிரிக்கும் போது எடுத்த புகைப்படம்.

இந்த புகைப்படம், இளவரசர் பிலிப் கடந்த 2012ம் வருடத்தில் இளவரசி பீட்ரைஸ், இளவரசி யூஜெனி ஆகியோருடன் டெர்பி விழாவில் எடுத்துக்கொண்டது.

Categories

Tech |