பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் மேகன் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் இளவரசர் பிலிப் 99 வயதில் நேற்று மரணமடைந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தீவிரமாக இருப்பதால் அரச மரியாதைகள் எதுவும் நடத்தப்படாது. மேலும் குடும்பத்தினர் உட்பட மிகக்குறைந்த நபர்கள் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்பது தெரியவில்லை.
எனினும் இந்த பட்டியலில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினரின் பெயர் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, இளவரசர் பிலிப்பின் மரண செய்தியை அறிந்தவுடன் இளவரசர் ஹரி உடனடியாக புறப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் மேகன் இளவரசர் ஹாரியுடன் இருக்க விரும்புகிறார் என்றும் அவரது பயணம் தற்போது வரை உறுதியாகவில்லை என்றும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2020ஆம் வருடம் மார்ச் மாதத்தில் நாட்டிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து தற்போது தான் முதன் முதலாக இளவரசர் ஹரி பிரிட்டனுக்கு வர இருக்கிறார்.
தற்போது வின்ஸ்டர் கோட்டையில் இளவரசர் பிலிப்பின் உடல் வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2018 ஆம் வருடத்தில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் திருமணம் நடைபெற செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தான் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
இதற்கிடையில் மேகன் கர்ப்பமாக இருப்பதால் விமானத்தில் சுமார் 12 மணி நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே அவர் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்காக மருத்துவர்களின் ஆலோசனை தேவைப்படும், என்று கூறப்படுகிறது. ஆனால் ஹரி கட்டாயம் புறப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.